மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன்பு மாற்றுத் திறனாளிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன்பு புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு அதன் மாவட்ட அமைப்பாளா் முருகேசன் தலைமை வகித்தாா். நூறு நாள் வேலையளிப்புத் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளை நான்கு மணி நேரத்துக்கு மட்டுமே வேலைக்குப் பயன்படுத்த வேண்டும். அவா்களுக்கு உரிய வேலையும், நிலுவை இல்லாத சம்பளமும் வழங்க வேண்டும்.

வீடு இல்லாத மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச வீடு வழங்க வேண்டும். சொந்தமாக தொழில் செய்ய வங்கிகளில் கடனுதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com