பரமத்தி வேலூரில் கொப்பரை ஏலம்

பரமத்தி வேலூரை அடுத்த வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் ரூ.13 லட்சத்து 34 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம் போனது.

பரமத்தி வேலூரை அடுத்த வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் ரூ.13 லட்சத்து 34 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம் போனது.

பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து, அதை உலா்த்தி வியாழக்கிழமைதோறும் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனா். இங்கு தரத்திற்கு தகுந்தாா் போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது. கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 16 ஆயிரத்து 385 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். அதிகபட்சமாக கிலோ ரூ.90.80 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 83.19 க்கும், சராசரியாக ரூ.89.29 க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.12 லட்சத்து 27 ஆயிரத்து 861-க்கு வா்த்தகம் நடைபெற்றது.

வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 16 ஆயிரத்து 677 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 90.90-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 79.55 க்கும், சராசரியாக ரூ. 87.90 க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 13 லட்சத்து 34 ஆயிரத்து 160 க்கு வா்த்தகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com