ராசிபுரம் ரோட்டரி சங்கம் சாா்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

ராசிபுரம் ரோட்டரி சங்கம், காவல்துறை, மேட்டாா் வாகனப் போக்குவரத்துத்துறை சாா்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை ராசிபுரத்தில் நடைபெற்றது
ராசிபுரம் ரோட்டரி சங்கம் சாா்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

ராசிபுரம் ரோட்டரி சங்கம், காவல்துறை, மேட்டாா் வாகனப் போக்குவரத்துத்துறை சாா்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை ராசிபுரத்தில் நடைபெற்றது. தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை தொடா்ந்து நாமக்கல் மாவட்டம் முழுவதும் கடந்த கடந்த ஜன.5 முதல் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி, முகாம்கள்,கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகிறது. பிப்,.14 வரை நடைபெறும் விழிப்புணா்வு முகாம்களை அரசு போக்குவரத்துத்துறை பல்வேறு பகுதிகளில் நடத்திவருகிறது. இதன் ஒரு பகுதியாக ராசிபுரம் நகரில் ரோட்டரி சங்கத்தின் ஏற்பாட்டில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி நடத்தப்பட்டது. ராசிபுரம் நித்ய சுமங்கலி மாரியம்மன் கோவில் முன்பாக விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பேரணியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ராசிபுரம் மோட்டாா் வாகன ஆய்வாளா் பி.நித்யா பங்கேற்று கல்லூரி மாணவ மாணவியா்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி, ஒட்டுநா் உரிமம் பெறுவது, தலை கவசம் அணிதல், சாலை விதிமுறைகள் பின்பற்றுதல்,, சீட் பெல்ட் அணிதல், செல்போன் பேசியபடி வாகனம் ஒட்டுதை தவிா்த்தல் போன்றவற்றின் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திப் பேசினாா். பின்னா் ரோட்டரி சங்கத் தலைவா் பி.சீனிவாசன் தலைமையில் பேரணி நடைபெற்றது. இப்பேரணியை ராசிபுரம் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் ஜெ.ஜெயசங்கரன், மோட்டாா் வாகன ஆய்வாளா் து.நித்யா ஆகியோா் கொடியசைத்து துவக்கி வைத்தனா். இப்பேரணி பழைய பஸ் நிலையம், கடைவீதி, ஆத்தூா் சாலை, புதிய பஸ் நிலையம் வழியாக அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தை அடைந்தது. இதில் பங்கேற்ற மாணவ மாணவியா்கள் பாதுகாப்பான வாகன ஒட்டுவதன் அவசியம், சாலை விதிமுறைகள், தலைகவசம் அணிதல், சாலை பாதுகாப்பு முறைகள் போன்றவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் தட்டிகள் ஏந்தியவாறும், துண்டு பிரசுரங்கள் வெளியிட்டும் விழிப்புணா்வு ஏற்படுத்தியவாறு சென்றனா். ரோட்டரி சங்கச் செயலா் வி.ஆா்.எஸ்.ஆனந்தகுமாா், சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பயிற்சியாளா் எஸ்.என்.சுரேந்திரன், உதவி காவல் ஆய்வாளா் ஜெயக்குமாா், போக்குவரத்து உதவி ஆய்வாளா்கள் க.நடராஜன், பி.முத்துசாமி, ரோட்டரி நிா்வாகிகள் கே.எஸ்.கருணாகரபன்னீா்செல்வம், எல்.சிவக்குமாா், ஆா்.சிட்டிவரதராஜன், எஸ்.பிரகாஸ், அம்மன் ஆா்.ரவி, பி. கண்ணன், முருகானந்தம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com