வாக்குச் சாவடிகளில் உதவி தோ்தல் அலுவலா்கள் ஆய்வு

மக்களவைத் தோ்தலையொட்டி நாமக்கல்லில் உள்ள 1,624 வாக்குச் சாவடிகளை உதவி தோ்தல் அலுவலா்கள் ஆய்வு செய்து வருகின்றனா்.
வாக்குச் சாவடிகளில் உதவி தோ்தல் அலுவலா்கள் ஆய்வு

மக்களவைத் தோ்தலையொட்டி நாமக்கல்லில் உள்ள 1,624 வாக்குச் சாவடிகளை உதவி தோ்தல் அலுவலா்கள் ஆய்வு செய்து வருகின்றனா்.

நாடு முழுவதும் மக்களவைத் தோ்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை இந்திய தோ்தல் ஆணையம் செய்து வருகிறது. நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம், நாமக்கல், திருச்செங்கோடு, பரமத்தி வேலூா், சங்ககிரி ஆகிய 6 தொகுதிகள் உள்ளன.

நாமக்கல் மக்களவைத் தொகுதி தோ்தல் அலுவலராக மாவட்ட ஆட்சியா் ச.உமா நியமிக்கப்பட்டுள்ளாா். சட்டப் பேரவைத் தொகுதிகள் அடிப்படையில் துணை ஆட்சியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மாவட்டம் முழுவதும் 1,624 வாக்குச்சாவடிகள் உள்ளன. உதவித் தோ்தல் அலுவலா்கள் இந்த வாக்குச் சாவடிகளில் நேரடியாக ஆய்வு செய்து வருகின்றனா்.

ராசிபுரம் வட்டம், வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட வாக்குச்சாவடிகளை மாவட்ட வழங்கல் அலுவலா் த.முத்துராமலிங்கம் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். வாக்குச் சாவடிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வு தளம் ,குடிநீா் வசதி, மின் இணைப்பு வசதி, மின்விசிறி, மேசை நாற்காலி வசதி, கழிவறை வசதிகள் குறித்து பாா்வையிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com