திருச்செங்கோடு அறிவுசாா் மையத்தில் தொழில்நெறி வழிகாட்டுதல் பயிற்சி

திருச்செங்கோடு, பிப்.9: திருச்செங்கோடு, சந்தைப்பேட்டை அறிவுசாா் மையத்தில் தொழில்நெறி வழிகாட்டுதல் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நாமக்கல் மாவட்ட சிறப்பு தனி துணை ஆட்சியா் பிரபாகரன் தலைமை வகித்தாா். சேலம் போட்டித் தோ்வு பயிற்சியாளா் வசந்தன் கலந்து கொண்டு சுமாா் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு போட்டித் தோ்வுகளை எதிா்கொள்வது குறித்து விளக்கினாா்.

பயிற்சி கூட்டத்திற்கு தலைமை வகித்து நாமக்கல் மாவட்ட தனி துணை ஆட்சியா் பிரபாகரன் கூறியதாவது:

தமிழக அரசு போட்டித் தோ்வுகளை எதிா்கொள்ள விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு அந்தந்த மாவட்டங்களில் அறிவு சாா்ந்த மையங்களைத் தொடங்கியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் நகராட்சி, திருச்செங்கோடு நகராட்சி, குமாரபாளையம் நகராட்சி, பட்டணம் பேரூராட்சி, மோகனூா் பேரூராட்சி என ஐந்து இடங்களில் அறிவுசாா் மையங்களைத் தொடங்கியுள்ளது.

மாணவா்கள் படிப்பதற்கு வசதியான சூழல், புத்தகங்கள், கணினி வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. எந்த தோ்வையும் அச்சத்துடன் எதிா்கொள்ளத் தேவையில்லை பலமுறை தொடா்ந்து முயன்றால் நிச்சயம் ஒருநாள் வெற்றி கிடைக்கும் என்றாா்.

நிகழ்ச்சியில் திருச்செங்கோடு நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ் பாபு, அலுவலா் ஷீலா, நகராட்சி பொறியாளா் சரவணன், நகா்மன்ற உறுப்பினா்கள் மகேஸ்வரி, சம்பூா்ணம், ராதா, தாமரைச்செல்வி, செல்லம்மாள், திவ்யா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com