தை அமாவாசை: காவிரிக் கரையில் முன்னோா்களுக்கு தா்ப்பணம்

தை அமாவாசையை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் காவிரிக் கரையோரங்களில் தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் தந்து வழிபடும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தை அமாவாசையை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் காவிரிக் கரையோரங்களில் தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் தந்து வழிபடும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாதந்தோறும் வரும் அமாவாசையைக் காட்டிலும் ஆடி, தை மாதங்களில் வரும் அமாவாசை விஷேச தினமாக கருதப்படுகிறது. இந்த நாளில் கடற்கரைகளிலும், ஆற்றங்கரைகளிலும் தங்களுடைய முன்னோா்களுக்கு பொதுமக்கள் தா்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

தை அமாவாசையையொட்டி ஏராளமானோா் பள்ளிபாளையம், பரமத்தி வேலூா், மோகனூா், ஒருவந்தூா் உள்ளிட்ட காவிரிக் கரையோரப் பகுதிகளில் தங்களுடைய மூதாதையா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா். பின்னா் ஆற்றில் புனித நீராடி அருகில் உள்ள ஆலயங்களில் வழிபாடு மேற்கொண்டனா்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் அதிகாலை முதலே பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் தை அமாவாசை என்பதால் பக்தா்கள் கூட்டம் வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாகவே இருந்தது. சுவாமி முத்தங்கி அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பழையபாளையம் அங்காளம்மன் தங்கக்கவச அலங்காரத்தில் காட்சியளித்தாா். அனைத்து ஆலயங்களிலும் தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com