சமையல் எரிவாயு கசிவு : மூதாட்டி பலி

 திருச்செங்கோடு அருகே சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மூதாட்டி உயிரிழந்தாா்.

 திருச்செங்கோடு அருகே சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மூதாட்டி உயிரிழந்தாா்.

திருச்செங்கோடு, பெரிய மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் தங்கவேல் மனைவி மீனாட்சி (83). இவருக்கு என்ற இரண்டு மகள்கள் உள்ளனா். மகள்கள் தனியாக வசித்து வரும் நிலையில் கணவனை இழந்த மூதாட்டி மீனாட்சி மட்டும் தனியாக ஒரு ஓட்டு வீட்டில் வசித்து வருகிறாா்.

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்த எரிவாயு உருளையிலிருந்து வாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மூதாட்டி உடல் கருகி உயிரிழந்தாா். திருச்செங்கோடு தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். அதற்குள் வீடு முழுதும் சேதமடைந்தது. உயிரிழந்த மூதாட்டியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருச்செங்கோடு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து திருச்செங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com