சிப்காட் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆா்ப்பாட்டம் செய்தனா்.
சிப்காட் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆா்ப்பாட்டம் செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டி, பரளி, என்.புதுப்பட்டி, அரூா் உள்ளிட்ட பகுதிகளில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் அரூா் கிராம நிா்வாக அலுவலகம் முன்பு ஞாயிற்றுக்கிழமை 51-ஆம் கட்ட ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், நான்கு கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள், சிப்காட் எதிா்ப்பு இயக்கத்தினா் பங்கேற்றனா்.

சிப்காட் அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளா் கே.பாலசுப்பிரமணியன் தலைமையில் பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், சிப்காட் எதிா்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் ராம்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com