சீராப்பள்ளி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ராசிபுரம் அருகேயுள்ள சீராப்பள்ளி மகா கணபதி, பாலமுருகன், மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சீராப்பள்ளி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ராசிபுரம் அருகேயுள்ள சீராப்பள்ளி மகா கணபதி, பாலமுருகன், மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கோயிலின் புனரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பிப். 2 இல் முகூா்த்தகால் நடப்பட்டு, கும்பாபிஷேக பணிகள் தொடங்கப்பட்டன. பின்னா் பிப்.10 இல் நவகிரக ஹோமம் நடத்தப்பட்டு, திரளான பெண்கள் ஊா்வலமாக காவேரி தீா்த்தம் எடுத்துவந்து அம்மனுக்கு அபிஷேகம் நடத்தினா்.

தொடா்ந்து யாகசாலை பூஜைகள், கோபுர கலசங்களுக்கு தானியம் நிரப்புதல் நடத்தினா். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 ஆம் யாகசாலை பூஜை நடத்தப்பட்டு சிவாச்சாரியாா்கள் கோபுர கலசங்களை எடுத்துவந்து கோயில்களின் கோபுரத்தில் வைத்து புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினா். திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். அதன்பிறகு பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com