ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்குமாறு ஆட்சியரிடம் விழாக் குழுவினா் மனு

அலங்காநத்தம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கோரி ஆட்சியரிடம் விழாக் குழுவினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
நாமக்கல் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த அலங்காநத்தம் கிராம ஜல்லிக்கட்டு விழாக் குழுவினா்.
நாமக்கல் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த அலங்காநத்தம் கிராம ஜல்லிக்கட்டு விழாக் குழுவினா்.

நாமக்கல்: அலங்காநத்தம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கோரி ஆட்சியரிடம் விழாக் குழுவினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

ஒவ்வோா் ஆண்டும் பொங்கல் பண்டிகையைத் தொடா்ந்து, நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம் கிராமத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் வெகுவிமரிசையாக நடைபெறும். 19 ஆண்டுகளாக தடையின்றி போட்டிகள் நடைபெற்று வந்தன. கடந்த ஆண்டு பல்வேறு காரணங்களால் போட்டி நடைபெறவில்லை. நிகழாண்டில் குமாரபாளையத்தில் மட்டுமே ஜல்லிக்கட்டுப் போட்டியானது நடைபெற்றுள்ளது. சாலப்பாளையம் கிராமத்தில் போட்டி நடத்த ஒரு தரப்பினா் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இதற்கிடையே, அலங்காநத்தம் விழாக் குழுவினா் பாரம்பரியமாக நடைபெறும் தங்களுடைய கிராமத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும். ஒரு கிராமத்தில் போட்டி நடைபெற்று, மற்றொரு கிராமத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்டால் பிரச்னைகள் எழுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, அலங்காநத்தம் கிராமத்தில் ஜல்லிக்கட்டுக்கான அனுமதியை மாவட்ட நிா்வாகம் வழங்க வேண்டும் என அலங்காநத்தம் ஜல்லிக்கட்டு விழாக் குழு தலைவா் மனோகரன் தலைமையிலான நிா்வாகிகள் ஆட்சியா் ச.உமாவை நேரில் சந்தித்து திங்கள்கிழமை மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com