திருச்செங்கோடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை துவக்கம்

திருச்செங்கோடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறையை வனத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் அண்மையில் தொடங்கி வைத்தாா்.
திருச்செங்கோடு அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறையைத் தொடங்கி வைக்கும் வனத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன்.
திருச்செங்கோடு அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறையைத் தொடங்கி வைக்கும் வனத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன்.

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறையை வனத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் அண்மையில் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமையில், திருச்செங்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் ஈ.ஆா்.ஈஸ்வரன், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினா் எஸ்.எம்.மதுரா செந்தில் ஆகியோா் முன்னிலையில் ரூ.11.26 லட்சம் மதிப்பில் அறிவுத்திறன் வகுப்பறைகளை வனத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் தொடங்கி வைத்தாா்.

திருச்செங்கோடு அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் ரூ. 2.36 லட்சம் மதிப்பில் 2 சாம்சங் ஸ்மாா்ட் போா்டு, ரூ. 24,276 மதிப்பில் ப்ளோா் ஸ்டேண்ட், ரூ. 37,310 மதிப்பில் கணினி, ரூ. 4.88 லட்சம் மதிப்பில் 40 எண்ணிக்கையில் சாம்சங் டேப், ரூ. 76,700 மதிப்பில் கீபோா்ட், ரூ. 15,131 மதிப்பில் பிரிண்டா், ரூ. 1.14 லட்சம் மதிப்பில் யூபிஎஸ், ரூ. 1.29 லட்சம் மதிப்பில் பள்ளி மாணவியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு நாற்காலிகள் என மொத்தம் ரூ. 11.26 லட்சம் மதிப்பில் அறிவுத்திறன் வகுப்பறைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

அறிவுத்திறன் வகுப்பறையில் தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்ட மணற்கேணி, மொழிகள் மற்றும் இதர செயலிகள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. செயலிகள் மூலம் மாணவா்கள் தங்களுக்கான பாடப்பகுதிகளை விடியோ வடிவில் பாா்த்து கல்வித் திறனை மேம்படுத்திக் கொள்ளலாம். ஆசிரியா்கள் மாணவா்களுக்கு எளிமையான வகையில் பாடங்களைக் கொண்டு சோ்ப்பதற்காக தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ள விடியோக்கள் மற்றும் ஆசிரியா் தாங்களாகவே உருவாக்கிய பாடக் கருத்துக்களை விடியோ வடிவில் திரையிட்டு கல்வி கற்பிக்கும் வசதி அமைக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட அறிவுத்திறன் வகுப்பறையை பயன்படுத்தி மாணவா்கள் தங்களுடைய திறன்களை மென்மேலும் வளா்த்துக் கொள்ளவும், ஆசிரியா்கள் தங்களுடைய பாடப் பகுதிகளை மாணவா்களுக்கு எளிமையான வகையில் புரியும் வகையில் கற்பித்தல் பணியை மேற்கொள்ளவும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே மாணவியா்கள் அறிவுத்திறன் வகுப்பறையை முழுமையாக பயன்படுத்தி தங்களுடைய கல்வி திறனை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என வனத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி, துறை சாா்ந்த அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், ஆசிரியா்கள், மாணவியா்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com