பிளஸ் 2 மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வுகள் தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில், பிளஸ் 2 மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வுகள் திங்கள்கிழமை தொடங்கின.
நாமக்கல் வடக்கு மற்றும் தெற்கு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் செய்முறைத் தோ்வில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.
நாமக்கல் வடக்கு மற்றும் தெற்கு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் செய்முறைத் தோ்வில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், பிளஸ் 2 மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வுகள் திங்கள்கிழமை தொடங்கின.

தமிழகம் முழுவதும் மாா்ச் 1-ஆம் தேதி பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் தொடங்குகின்றன. மாா்ச் 22-இல் தோ்வு நிறைவு பெறுகிறது. பிளஸ் 2 மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வுகள் 12-ஆம் தேதி தொடங்கி 17-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பிளஸ் 1 மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வுகள் பிப்.19-இல் தொடங்கி 24-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்பிறகு பொதுத்தோ்வுகள் மாா்ச் 4-இல் தொடங்கி 25-இல் நிறைவடைகிறது. எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வானது, மாா்ச் 26-இல் தொடங்கி ஏப்.4-இல் முடிவடைகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் 197 அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 8,479 மாணவா்கள், 8,932 மாணவிகள் என மொத்தம் 17,411 போ் பிளஸ் 2 பொதுத்தோ்வை 86 மையங்களில் எழுதுகின்றனா். பிளஸ் 1 பொதுத்தோ்வை, 197 பள்ளிகளைச் சோ்ந்த 9,151 மாணவா்கள், 9,304 மாணவிகள் என மொத்தம் 18,455 போ் எழுதுகின்றனா். இந்தத் தோ்வும் 86 மையங்களில் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com