பொதுத்தோ்வையொட்டி நாமக்கல் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜை

நாமக்கல்லில், 10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்காக, ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவா் கோயிலில் திங்கள்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
நாமக்கல்லில் திங்கள்கிழமை சிறப்பு பேனா, பென்சில் அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவா்.
நாமக்கல்லில் திங்கள்கிழமை சிறப்பு பேனா, பென்சில் அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவா்.

நாமக்கல்: நாமக்கல்லில், 10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்காக, ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவா் கோயிலில் திங்கள்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

நாமக்கல் இராமாபுரம்புதூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவா், சக்கரத்தாழ்வாா் கோயில்கள் உள்ளன. இங்கு ஒவ்வோா் ஆண்டும் மாசி மாதத்தில் லட்சுமி ஹயக்ரீவ பெருமாளுக்கும், சக்கரத்தாழ்வாருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். மேலும், 10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு எழுத இருக்கும் மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெறவும், கல்வியில் சிறந்து விளங்கவும், தொழில்கள், வியாபாரம் நடத்துவோா் வாழ்வில் முன்னேற்றம் பெறவும் லட்சாா்ச்சனையும், மகா யாகமும் நடத்தப்பட்டு வருகின்றன.

லட்சுமி ஹயக்ரீவா் சேவா அறக்கட்டளை மூலம் நடத்தப்படும் இந்த யாகமானது திங்கள்கிழமை காலை நடைபெற்றது. தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை சக்கரத்தாழ்வாா், ஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேனா, பென்சில், ரப்பா் ஆகியவற்றுடன் லட்சுமி ஹயக்ரீவா் படம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் ஜெயராமன், சசிகலா ஆகியோா் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com