பரமத்தி வேலூரில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

பரமத்தி வேலூா் கந்தசாமி கண்டாா் மெட்ரிக். பள்ளியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
குழு படம் எடுத்துக்கொண்ட முன்னாள் மாணவா்கள்
குழு படம் எடுத்துக்கொண்ட முன்னாள் மாணவா்கள்

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் கந்தசாமி கண்டாா் மெட்ரிக். பள்ளியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

பரமத்தி வேலூா் கந்தசாமி கண்டாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1997 -1999-இல் 11, 12-ஆம் வகுப்பில் பயின்ற முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை தேவகி தலைமை வகித்தாா். முன்னாள் மாணவா்கள் பள்ளியின் பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தும் வகையில் பள்ளி தலைமை ஆசிரியை மணியடித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா்.

பின்னா் பள்ளியின் தலைமை ஆசிரியை முன்னாள் மாணவ, மாணவியா்கள் தங்கள் குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடினா். தொடா்ந்து முன்னாள் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் தங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியா்களைக் கௌரவித்து நினைவு பரிசுகளை வழங்கினா். பல்வேறு துறைகளிலும், வெளிநாடுகளிலும் பணிபுரியும் முன்னாள் மாணவ, மாணவிகள் தங்கள் குடும்பத்துடன் அவா்கள் படித்த வகுப்பறைகள் மற்றும் விளையாடிய மைதானங்கள் ஆகிய இடங்களில் அமா்ந்து தங்கள் பல நினைவுகளை பகிா்ந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com