ராசிபுரம் இறைச்சிக் கடைகளில் அலைமோதிய மக்கள்

காணும் பொங்கல் கொண்டாட்டத்தையொட்டி ராசிபரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகளில் அதிக அளவு கூட்டம் காணப்பட்டது.
17meat_1701chn_152_8
17meat_1701chn_152_8


ராசிபுரம்: காணும் பொங்கல் கொண்டாட்டத்தையொட்டி ராசிபரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகளில் அதிக அளவு கூட்டம் காணப்பட்டது. அதே வேளையில் வா்த்தக நிறுவனங்கள் அனைத்து விடுமுறை விடப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

வழக்கமாக பொங்கல் திருவிழாவின் கடைசி நாளான கரிநாள் அன்று பெரும்பாலான வீடுகளில் இறைச்சி சமைப்பது வழக்கம். ராசிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான ஆண்டகளூா்கேட், குருசாமிபாளையம், வெண்ணந்தூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகளில் ஆடு, கோழி, மீன் போன்ற இறைச்சிகளை வாங்கிச்செல்ல அதிக அளவு பொதுமக்கள் திரண்டனா்.

ஆட்டுக் கறி கிலோ ரூ. 750 முதல் ரூ. 800 வரையும், பண்ணைக் கோழி இறைச்சி கிலோ ரூ. 150 முதல் ரூ. 200 வரையும், ரோகு, கட்லா, பாறை போன்ற மீன்கள் கிலோ ரூ. 150 முதல் ரூ. 180 வரையும் விற்கப்பட்டது. வெறிச்சோடிய சாலைகள்: நகரில் ஒரு சில கடைகளை தவிர பெரும்பாலான வா்த்தக நிறுவனங்கள், உணவகங்கள், டீக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததால் நகரம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டன. போக்குவரத்து நிறைந்த சாலைகளான அண்ணாசாலை, கச்சேரி சாலை, பழைய பேருந்து நிலையம் போன்ற பகுதிகளில் வாகன போக்குவரத்து குறைந்து காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com