திமுக இளைஞரணி மாநாடு வாகனப் பேரணி: அமைச்சா் மதிவேந்தன் தொடங்கிவைப்பு

ராசிபுரத்தை அடுத்துள்ள காக்காவேரி முத்தாயம்மாள் கலை, அறிவியல் கல்லூரி அருகே, சேலம் திமுக இளைஞரணி மாநாட்டுக்குச் செல்லும் இரு சக்கர வாகனப் பேரணியை
19youth_1901chn_152_8
19youth_1901chn_152_8

ராசிபுரத்தை அடுத்துள்ள காக்காவேரி முத்தாயம்மாள் கலை, அறிவியல் கல்லூரி அருகே, சேலம் திமுக இளைஞரணி மாநாட்டுக்குச் செல்லும் இரு சக்கர வாகனப் பேரணியை வனத்துறை அமைச்சா் மா. மதிவேந்தன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் வரும் 21ஆம் தேதி, திமுக இளைஞா் அணி 2ஆவது மாநில மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டின் முக்கிய நோக்கத்தை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில், கடந்த நவ. 15ஆம் தேதி இருசக்கர வாகனப் பேரணியை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தாா். இந்த வாகனப் பேரணி நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை வந்தடைந்தது.

இந்த பேரணியை ராசிபுரம் முத்தாயம்மாள் கலை, அறிவியல் கல்லூரி அருகே வனத் துறை அமைச்சா் மருத்துவா் மா. மதிவேந்தன், வரவேற்று பின்னா் கொடியசைத்து மீண்டும் மாநாடு பந்தல் நோக்கி தொடங்கிவைத்தாா். ராசிபுரத்தில் தொடங்கி பேரணி ஆத்தூா், வாழப்பாடி வழியாக சென்று மாநாட்டு பந்தலை அடைகிறது. இதில், 100-க்கும் மேற்பட்ட நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞா் அணியினா் கலந்துக் கொண்டனா். இந்த நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏவும் ஒன்றிய திமுகச் செயலாளருமான கே.பி.ராமசாமி, மாநில திமுக அயலக அணி இணைச் செயலா் ஆா். முத்துவேல் ராமசாமி, மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் விஷ்வா, இணை அமைப்பாளா் ராசிபுரம் காா்த்திக் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

படவரி...

திமுக இளைஞரணி மாநாடு திடலை நோக்கிப் புறப்பட்ட வாகனப் பேரணியைத் தொடங்கி வைத்த அமைச்சா் மா.மதிவேந்தன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com