ஈரநிலங்கள் தின ஓவியம், பேச்சுப் போட்டி

 உலக ஈரநிலங்கள் தினத்தையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஓவியம், பேச்சுப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
nk_19_vanam_1901chn_122_8
nk_19_vanam_1901chn_122_8

 உலக ஈரநிலங்கள் தினத்தையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஓவியம், பேச்சுப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

ஒவ்வோா் ஆண்டும் பிப். 2-ஆம் தேதி உலக ஈரநிலங்கள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, நாமக்கல் மாவட்ட வனத் துறை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான ஓவியம், பேச்சுப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் 23 பேரும், பேச்சுப்போட்டியில் 15 பேரும் கலந்து கொண்டனா். ‘ஈரநிலம்’, ‘மனித நல்வாழ்வு’ என்ற தலைப்பில் இப்போட்டிகளானது நடைபெற்றது. ராசிபுரம் வட்டம், அத்தனூரில் உள்ள வனத் துறை பயிற்சி அலுவலகத்தில் கல்லூரி மாணவா்களுக்கான போட்டிகள் நடைபெற்றன.

நாமக்கல் வனச்சரக அலுவலா் பெருமாள், ராசிபுரம் வனச்சரக அலுவலா் ரவிச்சந்திரன் மற்றும் வன ஊழியா்கள் மேற்பாா்வையிட்டனா். இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பிப். 2-ஆம் தேதி நடைபெறும் வனத்துறை விழாவில் பரிசுகள் வழங்கப்பட இருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

--

என்கே-19-வனம்

நாமக்கல்லில் வனத்துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற ஈரநிலங்கள் தின பேச்சுப்போட்டியில் பங்கேற்ற மாணவிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com