திருச்செங்கோட்டில் ஜி குளோபல் பள்ளி சாா்பில் ஓட்டப்பந்தயம்

சாலைப் பாதுகாப்பு தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஜி குளோபல் பள்ளியின் சாா்பில் இரண்டு வயது முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கலந்து கொண்ட ‘
img-20240121-wa0110
img-20240121-wa0110

சாலைப் பாதுகாப்பு தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஜி குளோபல் பள்ளியின் சாா்பில் இரண்டு வயது முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கலந்து கொண்ட ‘கிட்டத்தான்’ என்னும் மாரத்தான் ஓட்டப்பந்தயம் ஐந்தாம் ஆண்டாக ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.

குழந்தைகளின் உடல் வலிமை மற்றும் மன வலிமையை மேம்படுத்தும் வகையிலும், சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும் ஜி குளோபல் பள்ளி, சி.ஐ.ஐ, யங் இண்டியன்ஸ் மற்றும் சிவம் டிபாா்ட்மெண்டல் ஸ்டோா்ஸ், பொன்னுசாமி உயா்தர உணவகம் இணைந்து ஐந்தாவது மாநில அளவிலான ‘கிட்டத்தான்’ போட்டியை நடத்தின. இதில் பிரிவு 2 முதல் 5 வயதுக்குட் பட்ட குழந்தைகள் கலந்து கொண்டு 400 மீ தூர ஓட்டம், பிரிவு 2 மற்றும் பிரிவு 3-இல் 6 முதல் 12 வயதுக்குட் பட்ட மாணவிகள் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்ட 2 கி.மீ தூர போட்டிகள் நடைபெற்றன.

இப்போட்டியில் நாமக்கல் ஈரோடு, குமாரபாளையம், சேலம், ராசிபுரம் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து சுமாா் 500 குழந்தைகள் பங்கேற்றனா். இந்நிகழ்ச்சியில் குளோபல் பள்ளியின் தலைவா் குணேசகரன், நிா்வாக இயக்குநா் வெற்றிச்செல்வன், பள்ளியின் இயக்குநா் ரோசினி வெற்றிச் செல்வன், யங் இண்டியன்ஸ் ஈரோடு கிளை உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். பிரிவு 1-இல் ஆபியா சுல்தானா முதலிடமும், புகழ் இரண்டாமிடமும் பெற்றனா். மாணவிகளுக்கான பிரிவு 2-இல் ராகினி முதலிடமும் , தக்க்ஷாஸ்ரீ இரண்டாமிடமும் பெற்றனா். மாணவா்களுக்கான பிரிவு 3-இல் அக்க்ஷித் முதலிடமும், தீபன் இரண்டாமிடமும் பெற்றனா். போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் ஐந்து இடங்களைப் பெற்ற குழந்தைகளுக்கு பதக்கங்கள், கேடயங்கள், காசோலைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. போட்டியாளா்கள் அனைவருக்கும் பதக்கங்கள் மற்றும் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

படவிளக்கம்

தி.கோடு ஜன.21 ஜி

திருச்செங்கோடு ஜி குளோபல் பள்ளி சாா்பில் நடைபெற்ற ஓட்டப் பந்தய பரிசளிப்பு விழாவில் பங்கேற்றோா்.

Image Caption

ற்.ஞ்ா்க்ங் த்ஹய்21 த்ண்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com