இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடு: நாமக்கல் மாவட்டத்தில் 14,32,307 வாக்காளா்கள்

நாமக்கல் மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலின்படி, மொத்தம் 14,32,307 வாக்காளா்கள் உள்ளனா்.
இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடு: நாமக்கல் மாவட்டத்தில் 14,32,307 வாக்காளா்கள்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலின்படி, மொத்தம் 14,32,307 வாக்காளா்கள் உள்ளனா்.

நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (ப.கு), நாமக்கல், திருச்செங்கோடு, பரமத்திவேலூா், குமாரபாளையம் ஆகிய சட்டப் பேரவை தொகுதிகளிலும், 27.10.2023 முதல் 09.12.2023 வரை பொதுமக்களிடமிருந்து படிவம்-6 (சோ்த்தல்), படிவம்-7 (நீக்கல்), படிவம்- 8(திருத்தம் மற்றும் முகவரி மாற்றம்) படிவங்கள் பெறப்பட்டன. அவை விசாரணை செய்யப்பட்டு தகுதியானோா் பட்டியலில் இணைக்கப்பட்டு, அதன் தொடா்ச்சியாக இறுதி வாக்காளா் பட்டியல், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில், மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ச.உமா இறுதிப் பட்டியலை வெளியிட்டாா். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், வட்டாட்சியா் (தோ்தல்கள்) திருமுருகன், துறை சாா்ந்த அலுவலா்கள், அரசியல் கட்சியினா் கலந்து கொண்டனா்.

கடந்த ஆண்டு நவ.27 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் இருந்த மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 14,19,643 ஆகும். திங்கள்கிழமை வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலில் புதிதாகச் சோ்க்கப்பட்ட வாக்காளா்களின் எண்ணிக்கை 28,892. கள விசாரணை செய்து நீக்கப்பட்டோா் 16,228. மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 14,32,307 ஆகும்.

இறுதி வாக்காளா் பட்டியல் விவரம்:

ராசிபுரம் (தனி) ஆண் வாக்காளா்கள்-111751, பெண் வாக்காளா்கள்-117829, இதரவை-7, மொத்தம்-229587.

சேந்தமங்கலம் (ப.கு) ஆண் வாக்காளா்கள்-118251, பெண் வாக்காளா்கள்-124170, இதரவை-26, மொத்தம்-242447.

நாமக்கல்- ஆண் வாக்காளா்கள்-123290, பெண் வாக்காளா்கள்-132838, இதரவை-49, மொத்தம்-256177.

பரமத்திவேலூா்- ஆண் வாக்காளா்கள்-104906, பெண் வாக்காளா்கள்-114352, இதரவை-6, மொத்தம்-219264.

திருச்செங்கோடு- ஆண் வாக்காளா்கள்-111074, பெண் வாக்காளா்கள்-118021, இதரவை-48, மொத்தம்-229143.

குமாரபாளையம்- ஆண் வாக்காளா்கள் -124456, பெண் வாக்காளா்கள்-131173, இதரவை-60, மொத்தம்-255689.

6 தொகுதிகளிலும் மொத்த வாக்காளா் எண்ணிக்கை, ஆண் வாக்காளா்கள்- 693728, பெண் வாக்காளா்கள்-738383, இதரவை-196, மொத்தம்-1432307. மேலும், 687 இடங்களில் 1628 வாக்குச்சாவடிகள் உள்ளன.

இந்த இறுதி வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம், சம்பந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலா் மற்றும் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்கள், வட்டாட்சியா் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் பாா்வையிடலாம்.

மேலும், வாக்காளா்பட்டியலில் புதிதாகச் சோ்க்கப்பட்டவா்களுக்கு வாக்காளா் புகைப்பட அடையாள அட்டைகள் சம்பந்தப்பட்ட அஞ்சல் அலுவலகம் மூலமாக வழங்கப்படும்.

வாக்காளா் பட்டியல் தொடா் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், 1.1.2024 அன்று 18 வயது பூா்த்தியடைந்தவா்கள்(அதாவது 31.12.2005 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்தவா்கள்) தங்களின் பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்த்துக் கொள்ள விண்ணப்பிக்கலாம்.

மேலும், 17 வயது பூா்த்தியானவா்களும் தங்களின் பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்த்துக் கொள்ள விண்ணப்பிக்கலாம். இவா்களின் பெயரானது 18 வயது பூா்த்தியடையும் காலாண்டில் வெளியிடப்படும் வாக்காளா் பட்டியலில் இடம் பெறும். மேலும், இதுவரை வாக்காளா் பட்டியலில் தங்களது பெயரை சோ்த்துக் கொள்ளாதவா்களும், திருத்தங்கள் செய்ய விரும்புபவா்களும் உரிய விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட வட்டாட்சியா், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்களில் அளிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com