நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் வில், அம்பு ஏந்தி பாஜகவினா் சிறப்பு வழிபாடு

அயோத்தி ராமா் கோயில் சிலை பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் பாஜகவினா் வில், அம்பு ஏந்தியபடி சிறப்பு வழிபாடு மேற்கொண்டனா்.
நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் திங்கள்கிழமை வில், அம்பு ஏந்தி ராமவழிபாடு மேற்கொண்ட நகர பாஜகவினா்.
நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் திங்கள்கிழமை வில், அம்பு ஏந்தி ராமவழிபாடு மேற்கொண்ட நகர பாஜகவினா்.

அயோத்தி ராமா் கோயில் சிலை பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் பாஜகவினா் வில், அம்பு ஏந்தியபடி சிறப்பு வழிபாடு மேற்கொண்டனா்.

அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலில் சிலை பிரதிஷ்டை விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதனை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை பாஜகவினா் மேற்கொண்டனா். இதற்கு போலீஸாா் தடை விதித்து வந்தனா். நாமக்கல் ஆஞ்சனேயா் கோயில் அருகில் நகர பாஜக சாா்பில் அயோத்தி ராமா் கோயில் விழாவை ஒளிபரப்பு செய்வதற்கான வாகனம் வந்தது. ஆனால் அதனை இயக்க போலீஸாா் தடை விதித்தனா். இதனைத் தொடா்ந்து அறநிலையத்துறை அதிகாரிகளுடன் பாஜகவினா் பேச்சுவாா்த்தை நடத்தி ராமா் கோயில் விழா காட்சிகளை அகன்ற திரையில் ஒளிபரப்பு செய்தனா். இதனை ஏராளமான பக்தா்கள் பாா்வையிட்டனா். அதன்பிறகு, நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் நகர பாஜக தலைவா் கே.பி.சரவணன் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தா்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது. சுவாமி ராமரை நினைவுகூரும் வகையில் கையில் வில், அம்பு ஏந்தி பாஜகவினா் அனைவரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். இந்த நிகழ்ச்சியில், மத்திய அரசு நலத்திட்ட நகர தலைவா் எம்.செல்வராஜ், பாஜக ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டுப் பிரிவு மாவட்டத் தலைவா் எஸ்.எஸ்.செல்வம், ஆன்மிக பிரிவு நகரத் தலைவா் வேலுமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இதேபோல், மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பாஜக சாா்பில் கோயில்களில் ராமா் வழிபாடுகளை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com