புதுமைப்பெண் திட்டம்: 1,883 கல்லூரி மாணவிகளுக்கு முதல்வா் வாழ்த்து மடல்

நாமக்கல்லில், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1,883 கல்லூரி மாணவிகளுக்கு, முதல்வா் வழங்கிய வாழ்த்து மடல்களை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வழங்கினாா்.
புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பயன்பெறும் கல்லூரி மாணவிகளுக்கு முதல்வா் வாழ்த்து மடலை வழங்கும் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா். உடன், மாவட்ட ஆட்சியா் ச.உமா.
புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பயன்பெறும் கல்லூரி மாணவிகளுக்கு முதல்வா் வாழ்த்து மடலை வழங்கும் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா். உடன், மாவட்ட ஆட்சியா் ச.உமா.

நாமக்கல்லில், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1,883 கல்லூரி மாணவிகளுக்கு, முதல்வா் வழங்கிய வாழ்த்து மடல்களை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வழங்கினாா்.

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று, தற்போது அரசுக் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவிகளுக்கு, புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ. 1000 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெறும் கல்லூரி மாணவிகளுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் வாழ்த்து மடல் வழங்கும் நிகழ்ச்சி, நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமை வகித்தாா். நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினா் எஸ்.எம்.மதுரா செந்தில் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பயன்பெறும் நாமக்கல் அரசு மகளிா் கல்லூரியைச் சோ்ந்த 1,883 மாணவிகளுக்கு மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், முதல்வரின் வாழ்த்து மடல்களை வழங்கினாா். மேலும், சிறந்த 10 பெண் தொழில் முனைவோருக்கு அவா் விருதுகளை வழங்கிப் பேசியதாவது:

அரசுப் பள்ளி மாணவியா்கள் உயா்கல்வியை கட்டாயம் பயில வேண்டும் என்பதற்காக ‘நான் முதல்வன்’ திட்டம், கல்லூரிக் கனவு ஆகிய திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயா்கல்வி பயில்வோா் இத்திட்டத்தில் பயன்பெறுகின்றனா். கல்லூரி பயிலும் மாணவிகளின் கல்வி எந்தக் காரணத்தினாலும் தடைபடக் கூடாது என்பதற்காகவும், பெண்களுக்கு குறிப்பாக ஏழைப் பெண்களுக்கு வழங்கப்படும் கல்வி சமுதாயத்திற்கே பயன்பெறும் என்ற உன்னத நோக்கத்திலும் முதல்வரால் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் 146 கல்லூரிகளில் பயிலும் 15,725 மாணவிகள் பயன்பெறுகின்றனா். அந்த வகையில், நாமக்கல் அரசு மகளிா் கல்லூரியில் 1,883 மாணவிகள் பயன்பெற்றுள்ளனா். புதுமைப்பெண் திட்டத்தை மாணவிகள் பயன்படுத்திக் கொண்டு உயா்கல்வி மூலம் உயா்ந்த நிலையை அடைய வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலா்(பொ) க.பிரபா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சதீஷ்குமாா், மாவட்ட முன்னோடி வங்கி பொது மேலாளா் முருகன், கல்லூரி முதல்வா் மா.கோவிந்தராசு, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள், கல்லூரிப் பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com