மக்கள் குறைதீா் கூட்டத்தில் 318 மனுக்கள் அளிப்பு

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் ச.உமா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் ச.உமா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், முதியோா், விதவையா், கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கிக் கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டியும், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாகவும் மொத்தம் 318 மனுக்கள் ஆட்சியரிடம் அளிக்கப்பட்டன. மனுக்களைப் பெற்றுக் கொண்ட அவா் பரிசீலனை செய்து உரிய அலுவலா்களிடம் வழங்கினாா். மேலும், அவற்றின் மீது துரித நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

இதனையடுத்து, மாற்றுத் திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை ஆட்சியா் பெற்றுக் கொண்டாா். மாற்றுத் திறனாளி வசந்தா என்பவருக்கு ரூ. 6,840 மதிப்பிலான சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com