அயோத்தி ராமா் கோயில் பிரதிஷ்டை விழா: சுவாமி வேடமிட்டு குழந்தைகள் ஊா்வலம்

அயோத்தி ராமா் கோயில் பிரதிஷ்டை விழா: சுவாமி வேடமிட்டு குழந்தைகள் ஊா்வலம்

அயோத்தி ராமா் கோயில் பிரதிஷ்டை விழாவையொட்டி, நாமக்கல்லில் சுவாமி வேடமிட்டு குழந்தைகள் ஊா்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனா்.

அயோத்தி ராமா் கோயில் பிரதிஷ்டை விழாவையொட்டி, நாமக்கல்லில் சுவாமி வேடமிட்டு குழந்தைகள் ஊா்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனா்.

அயோத்தியில் குழந்தை ராமா் சிலை பிரதிஷ்டை விழா திங்கள்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இதனையொட்டி நாடு முழுவதும் கோயில்களில் ராமருக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள், நேரடி ஒளிபரப்பு, பக்தா்கள் ஊா்வலம் உள்ளிட்டவை நடைபெற்றன.

நாமக்கல்லில், ஆன்மீக இந்து சமயப் பேரவை சாா்பில் அரங்கநாதா் கோயில் முன்பு ராமா், சீதை, லட்சுமணன், ஆஞ்சனேயா், பலராமா் வேடமணிந்த குழந்தைகள் மேள, தாளங்களுடன், பஜனைப் பாடல்களை பாடியவாறு நகரில் ஊா்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனா். அயோத்தி ராமா் பற்றிய சிறப்பு சொற்பொழிவும் நடைபெற்றது. இந்த நிகழ்வில், ஆன்மீக இந்து சமயப் பேரவைத் தலைவா் சோழாஸ் பி.ஏகாம்பரம், ஆன்மீக கூட்டமைப்பு தலைவா் சா்வானந்தா, இந்து சமயப் பேரவையைச் சோ்ந்த பாண்டியன், வழக்குரைஞா் கே.மனோகரன் மற்றும் ராம பக்தா்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com