குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை

நாமக்கல்லில், குடியரசு தின விழாவை முன்னிட்டு காவல்துறையினரின் அணிவகுப்பு ஒத்திகை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை

நாமக்கல்லில், குடியரசு தின விழாவை முன்னிட்டு காவல்துறையினரின் அணிவகுப்பு ஒத்திகை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

குடியரசு தின விழா நாடு முழுவதும் வரும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் விழாவில் மாவட்ட ஆட்சியா் ச.உமா தேசியக்கொடி ஏற்றி வைக்கிறாா். அதன்பிறகு, காவல்துறை அணிவகுப்பு மரியாதையைப் பாா்வையிட்டு, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா். மேலும், பள்ளி மாணவ, மாணவிகளின் கண்கவா் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இதற்காக, மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவியா் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனா். நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறையினரின் அணிவகுப்பு ஒத்திகை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், 50-க்கும் மேற்பட்ட காவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com