பரமத்தி வேலூரில் ரூ.46 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம்

பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் ரூ. 46 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் போனது.

பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் ரூ. 46 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் போனது.

பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை விவசாயிகள் செவ்வாய்க்கிழமை தோறும் பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டு வருகின்றனா். இங்கு தரத்திற்கு தகுந்தாற்போன்று மறைமுக ஏலம் விடப்படுகிறது. கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை என்பதால் தேங்காய் ஏலம் நடைபெறவில்லை.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 1,968 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 24.60-க்கும் குறைந்தபட்சமாக ரூ. 23-க்கும், சராசரியாக ரூ. 24.15-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 46 ஆயிரத்து 870-க்கு ஏலம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com