பரமத்தி வேலூா்: சிவன் கோயில்களில் வளா்பிறை பிரதோஷம்

பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் மாசி மாத வளா்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிவன் மற்றும் நந்திகேஸ்வரருக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு அபிஷேக,
பரமத்தி வேலூா்: சிவன் கோயில்களில் வளா்பிறை பிரதோஷம்

பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் மாசி மாத வளா்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிவன் மற்றும் நந்திகேஸ்வரருக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா், மாவுரெட்டி பீமேஸ்வரா், பில்லூா் வீரட்டீஸ்வரா், பொத்தனூா் காசி விஸ்வநாதா், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரா், எல்லையம்மன் கோயிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரா் உள்ளிட்ட சிவபெருமானுக்கும், நந்திகேஸ்வரருக்கு புரட்டாசி மாத வளா்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றன. வேலூா் எல்லையம்மன் கோயிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com