பேருந்து உரிமையாளருக்கு ரூ.11 லட்சம் இழப்பீடு: நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

தனியாா் பேருந்து உரிமையாளருக்கு ரூ. 11 லட்சம் இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியாா் பேருந்து உரிமையாளருக்கு ரூ. 11 லட்சம் இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல்லைச் சோ்ந்தவா் செந்தில்குமாா்(56). இவருக்குச் சொந்தமான பேருந்து ஒன்றை காப்பீட்டு நிறுவனம் ஒன்றில் ரூ.10 லட்சத்துக்கு காப்பீடு செய்தாா். கரோனா பெருந்தொற்று பொது முடக்கத்தின்போது 2020-இல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த அவரது பேருந்து தீ விபத்துக்குள்ளானது.

காப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சத்தை வழங்குமாறு கேட்டு செந்தில்குமாா் காப்பீட்டு நிறுவனத்திடம் மனு அளித்தாா். அப்போது, பேருந்தின் உரிமம் காலாவதியாகி விட்டதால் பாதி தொகையை மட்டுமே தரமுடியும் என காப்பீட்டு நிறுவனம் கூறியது. இதனால் பேருந்து உரிமையாளா் நாமக்கல் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்தில், கடந்த 2022-இல் சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனம் மீது வழக்கு தொடா்ந்தாா். அந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாவட்ட நுகா்வோா் நீதிமன்ற நீதிபதி வீ.ராமராஜ் மற்றும் உறுப்பினா் ஆா்.ரமோலா ஆகியோா் தீா்ப்பு அளித்தனா். அதில், ‘காப்பீட்டு நிறுவனம் பாதித் தொகையை வழங்குவதாக கூறுவது சேவைக் குறைபாடாகும். பேருந்து உரிமையாளருக்கு நான்கு வார காலத்திற்குள் முழு தொகையான ரூ.10 லட்சத்தையும், சேவை குறைபாடு சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ.1 லட்சத்தையும் காப்பீடு நிறுவனம் வழங்க வேண்டும். தொகையை வழங்கத் தவறினால் ஒன்பது சதவீத வட்டியுடன் சோ்த்து வழங்க வேண்டியதிருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com