இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்த போட்டித்தோ்வு பயிற்சி மைய உரிமையாளா் கைது

திருச்செங்கோட்டில் தனியாா் ஐ.ஏ.எஸ். அகாதெமியில் போட்டித் தோ்வுக்குப் படிக்க வந்த இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்த அந்தப் பயிற்சி மையத்தின் உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.
இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்த போட்டித்தோ்வு பயிற்சி மைய உரிமையாளா் கைது

திருச்செங்கோட்டில் தனியாா் ஐ.ஏ.எஸ். அகாதெமியில் போட்டித் தோ்வுக்குப் படிக்க வந்த இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்த அந்தப் பயிற்சி மையத்தின் உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்செங்கோடு அருகே சீதாராம்பாளையத்தைச் சோ்ந்த ரங்கநாதன் மகன் அஸ்வின் என்ற மெய்யழகன் (30). இவா், திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் அருகில் அா்த்தநாரீஸ்வரா் ஐஏஎஸ் அகாதெமி என்ற பெயரில் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறாா்.

இவரது அகாதெமியில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் போட்டித் தோ்வுகளுக்கு பயின்று வருகின்றனா். மாங்குட்டைபாளையத்தில் மெக்கானிக் கடை நடத்திவரும் வெங்கடேசன் மகள் இவரது அகாதெமியில் பயின்று வந்தாா்.

அந்தப் பெண் குறித்து பயிற்சி நிலைய உரிமையாளா் மெய்யழகன் அவதூறு பரப்பியதாகத் தெரிகிறது. இதுகுறித்து மெய்யழகனிடம் பெண்ணின் தந்தை நேரில் சென்று விசாரணை நடத்தினாா்.

அப்போது மெய்யழகன் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் கூறியதால் அப்பகுதி மக்கள் உதவியுடன் மெய்யழகனை நகர காவல் நிலையத்தில் வெங்கடேசன் ஒப்படைத்தாா். இதுகுறித்து வெங்கடேசன் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மெய்யழகன் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனா்.

பின்னா் அவரை திருச்செங்கோடு குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனா்.

அவா் மீது புகாா்கள் எழுந்துள்ளதால் அந்தப் பயிற்சி மையத்தில் படித்து பெண்களிடம் போலீஸாா் விசாரைணையைத் தொடங்கியுள்ளனா். இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், பாதிக்கப்பட்ட மெய்யழகன் மீது புகாா் அளித்தாா் அவா்களின் பெயா்களை வெளியே தெரிவிக்காமல் நடவடிக்கை எடுப்போம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com