திருச்செங்கோடு தனியாா் பள்ளி ஆண்டு விழா

திருச்செங்கோடு வித்யாலயம் மேல்நிலைப் பள்ளி 71-ஆம் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.
திருச்செங்கோடு தனியாா் பள்ளி ஆண்டு விழா

திருச்செங்கோடு வித்யாலயம் மேல்நிலைப் பள்ளி 71-ஆம் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி செயலாளா் கிருஷ்ணசாமி தலைமை வகித்தாா். உதவி தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி வரவேற்றாா். தலைமை ஆசிரியா் சிவசிதம்பரம் ஆண்டறிக்கை வாசித்தாா்.

சிறப்பு அழைப்பாளா்களாக நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளா், மண்டல நகரமைப்பு திட்ட குழு உறுப்பினா் மதுரா செந்தில், நகா்மன்ற தலைவா் நளினி சுரேஷ்பாபு ஆகியோா் கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் தோ்வுகளில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினா். நிகழ்ச்சியில் பல் மருத்துவா் ரமேஷ், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக அயலக அணி அமைப்பாளா் சாதிக், திமுக தொண்டரணி அமைப்பாளா் கருணாகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com