கபிலா்மலையில் தைப்பூச தேரோட்டம்

கபிலா்மலையில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச தேரோட்டம்
கபிலா்மலையில் தைப்பூச தேரோட்டம்

கபிலா்மலையில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஒவ்வொரு வருடமும் தைப்பூசத்தன்று தோ்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த வருடமும் கபிலா்மலை பாலசுப்ரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் தோ்திருவிழா கடந்த 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 18-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை காலையில் தினந்தோறும் பல்லக்கு உற்சவமும், இரவு அன்னம், ரிஷபம், மயில், யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும், திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றன. தோ்த்திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை முதல் வியாழக்கிழமை இரவு வரை பக்தா்கள் வேலூா்,ஜேடா்பாளையம், சோழசிராமணி உள்ளிட்ட காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி காவிரி ஆற்றில் இருந்து பால் காவடி, பன்னீா் காவடி, புஷ்பக் காவடி, இளநீா் காவடி, தேன் காவடி மற்றும் தீா்த்தக்குடங்களுடன் ஊா்வலமாக புறப்பட்டு பாதையாத்திரையாக கோவிலுக்கு சென்று தங்களது வேண்டுதலை நிறைவேற்றினா். வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் சுவாமி தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 4 மணிக்கு மேல் தேரை பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனா். திருத்தோ் மலையை சுற்றி வந்து நிலையை அடைந்தது. தோ்த் திருவிழாவில் நாமக்கல், கரூா், திருச்சி மற்றும் ஈரோடு மாவட்டங்களை சோ்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு பாலசுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தனா். பக்தா்களின் பாதுகாப்பு கருதி பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் ராஜமுரளி தலைமையில் மலை அடிவாரத்தில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு 250-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com