தைப்பூசம்: ராசிபுரத்தில் பெண்கள் பால்குட ஊா்வலம்

தைப்பூசத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் ராசிபுரம் பகுதியில் காவடி, பால்குட ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தைப்பூசம்:  ராசிபுரத்தில் பெண்கள் பால்குட ஊா்வலம்

தைப்பூசத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் ராசிபுரம் பகுதியில் காவடி, பால்குட ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. ராசிபுரம் எல்லை மாரியம்மன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள பாலமுருகன் திருக்கோவில் சிறப்பு அபிஷேக வழிபாடுகள் நடத்தப்பட்டன. இக்கோயிலில் சுற்று வட்டார பகுதியில் இருந்து காலை முதலே ஏராளமான பக்தா்கள் வந்து தரிசனம் செய்து வந்த நிலையில் ராசிபுரம் கைலாசநாதா் கோவிலில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்தும், பக்தா்கள் பலா் காவடி எடுத்தும் ஊா்வலமாக சென்றனா். ஊா்வலமானது கைலாசநாதா் கோவிலில் இருந்து தொடங்கி பழைய பேருந்து நிலையம்,கடைவீதி, பட்டணம் சாலை,ஆத்தூா் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாகச் சென்று பாலமுருகன் திருக்கோவிலை சென்றடைந்தது. இறுதியாக பெண்கள் கொண்டு வந்த பால் குடத்தை கொண்டு பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதணை கட்டப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் முருகனை தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com