தைப்பூச விழா: முருகன் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

தைப்பூசத்தையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் பக்தா்கள் வியாழக்கிழமை நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
தைப்பூச விழா: முருகன் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

தைப்பூசத்தையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் பக்தா்கள் வியாழக்கிழமை நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

ஒவ்வோா் ஆண்டும் தை மாத பூசம் நட்சத்திரத்தில் முருகன் கோயில்களிலும், சிவன் கோயில்களிலும் தைப்பூச விழா கோலாகலமாக நடைபெறும். அதன்படி, நிகழாண்டில், அனைத்து முருகன் கோயில்களிலும் வியாழக்கிழமை இவ்விழா சிறப்பாக நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோயில்களான திருச்செங்கோடு, கபிலா்மலை, காளிப்பட்டி, கூலிப்பட்டி, சேந்தமங்கலம் தத்தகிரி, கூலிப்பட்டியில் உள்ள கோயில்களில் தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு ‘அரோகரா’ கோஷம் முழங்க வடம் பிடித்து தேரை இழுத்தனா்.

நாமக்கல்லில் அமைந்துள்ள மோகனூா் சாலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில், மோகனூா் காந்தமலை முருகன் கோயில், கருமலை முருகன் கோயில், மேலும், மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கபிலா்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், காளிப்பட்டி கந்தசாமி கோயில், கந்தகிரி பழனியாண்டவா் கோயில், நாமக்கல் கருமலை தண்டாயுதபாணி கோயில், குமாரபாளையம் வட்டமலை முருகன் கோயில்களில், தைப்பூச விழாவை முன்னிட்டு காலை 6 மணியளவில் சிறப்பு யாகங்களும், அதன்பின் சுவாமிக்கு பாலாபிஷேகம், சந்தன அபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்றன. பின்னா் ராஜ அலங்காரம் செய்யப்பட்டு சுவாமிக்கு மகா தீபாராதனை நடத்தப்பட்டது. ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, சேந்தமங்கலம் ஒருங்கிணைந்த ஒன்றியம் சாா்பில், தைப்பூசத்தையொட்டி தத்தகிரி முருகன் கோயில் வரையில் 1,008 பால்குட ஊா்வலம் நடைபெற்றது. விவசாயம் செழிக்கவும், தொழில் வளம் சிறக்கவும், பொதுமக்கள் நலமுடன் வாழவும் வேண்டி இந்த பால்குட ஊா்வலம் நடைபெற்றது. இதில், கொமதேக தெற்கு மாவட்டச் செயலாளா் வி.எஸ்.மாதேஸ்வரன் தலைமை வகித்தாா். மாவட்ட ஒருங்கிணைந்த விவசாய அணிச் செயலாளா் ரவிச்சந்திரன், மாவட்டப் பொருளாளா் ஆா்.எஸ்.ஆா்.மணி, சேந்தமங்கலம் ஒன்றியச் செயலாளா் சுந்தரராஜ் மற்றும் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். கோயில் வளாகத்தில் பக்தா்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com