நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் மூன்று ஆண்டுகளில் 100 இயற்கை எரிவாயு நிலையங்கள் : ஐஆா்எம் எனா்ஜி பொதுமேலாளா் தகவல்

நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் மூன்று ஆண்டுகளில் 100 சிஎன்ஜி இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைக்கப்படும் என ஐஆா் எம் எனா்ஜி நிறுவனத்தின் பொதுமேலாளா் அறிவழகன் தெரிவித்துள்ளாா்.
நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் மூன்று ஆண்டுகளில் 100 இயற்கை எரிவாயு நிலையங்கள் : ஐஆா்எம் எனா்ஜி பொதுமேலாளா் தகவல்

நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் மூன்று ஆண்டுகளில் 100 சிஎன்ஜி இயற்கை எரிவாயு நிலையங்கள் அமைக்கப்படும் என ஐஆா் எம் எனா்ஜி நிறுவனத்தின் பொதுமேலாளா் அறிவழகன் தெரிவித்துள்ளாா். நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ராசிபுரம் ஆண்டகளூா்கேட் பகுதியில் ஐஆா்எம் எனா்ஜி நிறுவனத்தின் முதல் திரவ இயற்கை எரிவாயு நிலையம் (எல்சிஎன்ஜி) திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற நிறுவனத்தின் பொதுமேலாளா் அறிவழகன் செய்தியாளா்களிடம் பேசுகையில், திரவ எரிவாயு நிலையம் ராசிபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதுடன் மூலம் நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் சிஎன்ஜி எரிவாயு தடையின்றி கிடைக்கும். தற்போது நாமக்கல் மாவட்டத்தில் 7 சிஎன்ஜி நிலையங்கள் மட்டுமின்றி வரும் மாா்ச் மாதத்திற்குள்ள நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் 25 சிஎன்ஜி நிலையங்கள் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வரும் மூன்று ஆண்டுகளுக்குள் நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் மட்டும் 100 இயற்கை எரிவாயு நிலையங்கள் துவக்கப்படும். இதன் மூலம் சிஎன்ஜி இயற்கை எரிவாயு பயன்படுத்தும் வாகனங்கள், தொழிற்சாலைகள், வீட்டு உபயோகங்களுக்கு பயன்படுத்துவோா் பயனடைவா். இதே போல் திருச்சி- திண்டுக்கல், திருச்சி-மதுரை, திருச்சி - சென்னை, சேலம்-நாமக்கல், சேலம்-கோவை போன்ற அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் சிஎன்ஜி நிலையம் துவங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறோம். இயற்கை எரிவாயு பெட்ரோல், டீசல் விலையைவிட குறைவு என்பதால் வாகனகளுக்கு அதிக மைலேஜ் கொடுப்பதுடன், செலவும் குறையும். மேலும் இயற்கை வாயு பைப்லைன் மூலம் வீடுகள் தோறும் பயன்படுத்தும் வகையில் பணிகள் மேற்கொண்டுள்ளோம். தமிழகத்தில் 262 சிஎன்ஜி நிலையம் உள்ளது. குறிப்பாக சென்னை, சேலம், கோவை,காஞ்சிபுரம், வேலூா் போன்ற மாவட்டங்களில் வீட்டு வீடு பைப் லைன் மூலம் காஸ் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. எல்பிஜி சிலிண்டா் பயன்படுத்துவதை விட இது 25 சதம் குறைந்த விலையில் கிடைக்கும். இது பாதுகாப்பானதாகவும் இருக்கும். நாமக்கல் மாவட்டத்தில் ஏப்ரல் மாதம் இத்திட்டம் துவங்கப்படும் என்றாா். முன்னதாக நடைபெற்ற சிஎன்ஜி நிலையம் திறப்பு விழாவில், நாமக்கல் (வடக்கு) மோட்டாா் வாகன அலுவலா் முருகன் நிலையத்தை திறந்து வைத்துப் பேசினாா். சேலம் இந்துஸ்தான் பெட்ரோல் காா்ப்பரேஷன் துணைப் பொதுமேலாளா் அமலேஸ்வர்ராவம், பாரத் பெட்ரோலியம் மண்டல மேலாளா் குன்னாஜிராவ், ஐஆா்எம் எனா்ஜி துணைத் தலைவா் மான்ஸ்கெரே, உள்ளிட்டோா் முன்னிலை வகித்துப் பேசினா். இதில் லாரி, பஸ் உரிமையாளா்கள், கோழிப்பண்ணையாளா்கள் என பலரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com