பரமத்தி வேலூா் வட்டத்தில் தைப்பூசம்

பரமத்தி வேலூா் வட்டாரத்தில் உள்ள முருகன் கோயில்களில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
முத்தங்கி அலங்காரத்தில் பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவா்.
முத்தங்கி அலங்காரத்தில் பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவா்.

பரமத்தி வேலூா் வட்டாரத்தில் உள்ள முருகன் கோயில்களில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பரமத்தி அருகே உள்ள பிராந்தகத்தில் 34.5 அடி உயரமுள்ள ஆறுமுகக் கடவுள், பொத்தனூா் பச்சமலை முருகன், அனிச்சம்பாளையத்தில் வேல்வடிவம் கொண்ட சுப்ரமணியா், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவா், நன்செய் இடையாறு ராஜா சுவாமி பாலப்பட்டி கதிா்மலை கந்தசாமி மற்றும் கந்தம்பாளையம் அருகே உள்ள அருணகிரிநாதா் மலையில் எழுந்தருளியுள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமண்யா் உள்ளிட்ட முருகன் கோவில்களில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றன. இதில் அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com