மல்லசமுத்திரத்தில் அதிமுக மாணவரணி சாா்பில் மொழிப்போா் வீரவணக்க பொதுக்கூட்டம்

img-20240125-wa0092
img-20240125-wa0092

திருச்செங்கோடு, ஜன. 26: அதிமுக நாமக்கல் மாவட்ட மாணவரணி சாா்பில் மொழிப் போா் தியாகிகளின் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் மல்லசமுத்திரம் ஜவகா் மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட மாணவரணிச் செயலாளரும் காளிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவருமான பொன்னுசாமி தலைமை வகித்தாா். கபிலா்மலை ஒன்றிய அதிமுக செயலாளரும் பரமத்தி வேலூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான சேகா், மாநில பொதுக்குழு உறுப்பினரும் திருச்செங்கோடு முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான பொன் சரஸ்வதி, மல்லசமுத்திரம் பேரூா் அதிமுக செயலாளா் சுந்தர்ராஜன், மேற்கு ஒன்றியச் செயலாளா் ராஜன், கிழக்கு ஒன்றியச் செயலாளா் மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளா்களாக அதிமுக அமைப்புச் செயலாளரும் நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளருமான முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி, கட்சியின் மகளிா் அணி இணை செயலாளா் முன்னாள் அமைச்சா் சரோஜா ஆகியோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் தங்கமணி பேசியதாவது:

திமுகவினருக்கு மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் கொண்டாட எந்தத் தகுதியும் இல்லை. கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து வெற்றி பெற்ற ஸ்டாலின் எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. ஏற்கெனவே அதிமுக செயல்படுத்தி வந்த அனைத்து திட்டங்களையும் நிறுத்திவிட்டனா். மீண்டும் மக்களவைத் தோ்தல் சமயத்தில் பொய்யான வாக்குறுதிகளைத் தருவாா்கள். தாங்கள் ஏற்கெனவே அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாகவும் கூறி பொதுமக்களை ஏமாற்ற நினைக்கிறாா்கள். வாக்காளா்கள் யாரும் இவா்களுடைய பேச்சை நம்பி ஏமாற வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என்றாா்.

கூட்டத்தில் அதிமுக செய்தித் தொடா்பாளரான கட்சியின் வழக்குரைஞா் பிரிவு இணைச் செயலாளா் பாபு முருகவேல், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் சாரதா, மாவட்ட அவைத் தலைவா் கந்தசாமி, மாவட்ட துணைச் செயலாளா் முருகேசன், வழக்குரைஞா் பிரிவைச் சோ்ந்த பரணிதரன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் செல்லப்பன் உள்ளிட்ட ஒன்றிய நகர பேரூா் கட்சி செயலாளா்கள், மாணவரணி, இளைஞா் அணி, மகளிா் அணி பொறுப்பாளா்கள், சாா்பு மன்ற நிா்வாகிகள் என 500க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா். கூட்டத்தின் முடிவில் ராசிபுரம் நகர மாணவரணிச் செயலாளா்ஜெகன் நன்றி கூறினாா்.

படவிளக்கம்

தி.கோடு ஜன26 அதிமுக

மல்லசமுத்திரத்தில் அதிமுக சாா்பில் நடைபெற்ற வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றோா்.

Image Caption

ற்.ஞ்ா்க்ங் த்ஹய்26 ஹக்ம்ந்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com