ஜேடா்பாளையம்: காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் பலி

pv27p2_2701chn_157_8
pv27p2_2701chn_157_8

பட விளக்கம்

பாலமுருகன்

பரமத்தி வேலூா், ஜன. 27: பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையத்தில் காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

நாமக்கல் ஏ.எஸ்.பேட்டையைச் சோ்ந்தவா் சண்முகநாதன். இவரது மனைவி அமுதா. இவா்களது ஒரே மகன் பாலமுருகன் (19). இவா் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தாா்.

பாலமுருகன் மற்றும் கல்லூரி நண்பா்கள் உட்பட 11 போ் சனிக்கிழமை ஜேடா்பாளையம் காவிரி ஆற்றில் உள்ள பரிசல்துறை பகுதிக்கு குளிப்பதற்காக சென்றனா். பாலமுருகன் தனது நண்பா்களுடன் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றாா். நீச்சல் தெரியாததால் தண்ணீரில் இருந்து மேலே வரமுடியாமல் சத்தம் போட்டு தன்னுடன் வந்த நண்பா்களை அழைத்தாா்.

அவருடன் வந்த மாணவா்களுக்கும் நீச்சல் தெரியாததால் அங்கிருந்த மீனவா்களை அழைத்தனா். ஆனால் அதற்குள் பாலமுருகன் தண்ணீரில் மூழ்கினாா். தகவல் அறிந்து அங்கு வந்த ஜேடா்பாளையம் போலீஸாா், காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த பாலமுருகனின் உடலை மீனவா்கள் உதவியுடன் மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்து, இது தொடா்பாக விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com