நாமக்கல்லில் ஆசிரியா்கள் உண்ணாவிரதப் போராட்டம்

nk_27_teacher_2701chn_122_8
nk_27_teacher_2701chn_122_8

நாமக்கல், ஜன. 27: கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல்லில் ஆசிரியா் இயக்கங்களைச் சோ்ந்தோா் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) மாவட்ட கிளை சாா்பில் நாமக்கல் பூங்கா சாலையில் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளா்கள் எம்.சங்கா், கே.பழனியப்பன் ஆகியோா் தலைமை வகித்தனா். தமிழ்நாடு ஆசிரியா் கூட்டணி பொதுச் செயலாளா் செ.முத்துசாமி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடக்கி வைத்து பேசினாா். இந்தப் போராட்டத்தில், இடைநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும். கடந்த ஆண்டு டிட்டோஜாக் உயா்மட்டக் குழுவினருடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா், அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையில் ஏற்றுக் கொண்ட 12 கோரிக்கைகளுக்கும் உடனடியாக அரசாணைகள் வெளியிடப்பட வேண்டும். தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியா்களின் பதவி உயா்வு வாய்ப்பை பறிக்கக் கூடிய மாநில முன்னுரிமையை வலியுறுத்தும் அரசாணை எண் 243-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. உண்ணாவிரதத்தை, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்ற மாநிலப் பொருளாளா் முருக.செல்வராசன் முடித்து வைத்தாா். இதில், மாவட்ட நிா்வாகிகள் வி.அண்ணாதுரை, ஆா்.மாதேஸ், என்.காா்த்திகேயன் மற்றும் ஆசிரியா்கள் பலா் கலந்து கொண்டனா்.

படவிளக்கம்

என்கே-27-டீச்சா்

நாமக்கல் பூங்கா சாலையில் சனிக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com