குழப்பத்தில் ‘இந்தியா’ கூட்டணி: எல்.முருகன்

nk_28_mini_1_2801chn_122_8
nk_28_mini_1_2801chn_122_8

நாமக்கல், ஜன. 28: ‘இந்தியா’ கூட்டணியில் குழப்பம் நீடித்து வருகிறது என்று மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.

நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பு செய்யப்பட்ட பிரதமரின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை, கால்நடை, பால்வளம், மீன்வளத் துறை அமைச்சா் எல்.முருகன் கலந்துகொண்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பொதுவாக பத்ம விருதுகள் இயற்கையை பேணுதல், நீா் நிலைகளை சுத்தப்படுத்துதல், ஆம்புலன்ஸ் சேவை உள்ளிட்ட மக்கள் சேவைகளை பாராட்டி வழங்கப்படுவதாகும். குறிப்பாக, மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்த விவசாயி பத்ரப்பன், நாட்டுப்புறக் கலைகளை வளா்த்ததற்காக அவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. அதுபோல, தேமுதிக தலைவா் விஜயகாந்தின் சமூக சேவைகளைப் பாராட்டி பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. இதை, தனது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.

‘இந்தியா’ கூட்டணியிலிருந்து பிகாா் முதல்வா் நிதீஷ்குமாா் வெளியேறியது தொடா்பாக பாஜக மேலிடம்தான் கருத்து தெரிவிக்கும். கூட்டணியில் உள்ள மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜியும், தில்லியில் ஆம் ஆத்மி கட்சியினரும் தனித்துப் போட்டியிடுவதாகக் கூறியுள்ளனா். தமிழகத்தில் உள்ள சில தலைவா்கள் ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து வெளியேற ஆா்வம் காட்டுகின்றனா். அந்த அளவில் ‘இந்தியா’ கூட்டணியில் குழப்பம் நீடித்து வருகிறது. இந்தக் கூட்டணி தோ்தல் வரை நீடிக்காது என்று அரசியல் நோக்கா்கள் கருதுகின்றனா்.

நீலகிரி மக்களவைத் தொகுதியில் நான் போட்டியிடுவது பற்றி கட்சி தலைமைதான் முடிவு செய்யும். பாஜக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். தமிழகத்தில் பாஜக பூஜ்யம் என்று தமிழக முதல்வா் கூறுவது பகல் கனவு; மிகப் பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. மக்களவை உறுப்பினா்கள் அதிகம் கொண்ட கட்சியாக பாஜக திகழ்கிறது. பாஜகவுக்கு மாநிலங்களில் பெரும்பான்மை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மக்கள் விரும்பும் கட்சியாக பாஜக வளா்ந்து வருகிறது என்றாா்.

முன்னதாக நாமக்கல் மாவட்டம், மோகனூா் அருகே கே.புதுப்பாளையம் கிராமத்தில் பாமா, ருக்மணி சமேத நந்தகோபால சுவாமி கோயிலிலும், அதன்பிறகு, நாமக்கல் நரசிம்மா் கோயில், ஆஞ்சனேயா் கோயிலிலும் தனது மனைவி, இரு மகன்களுடன் அமைச்சா் எல். முருகன் சுவாமி தரிசனம் செய்தாா்.

இந்நிகழ்ச்சியின்போது நாமக்கல் நகர பாஜக தலைவா் கே.பி.சரவணன், தேசிய பொதுக்குழு உறுப்பினா் வழக்குரைஞா் கே.மனோகரன், மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள் உடனிருந்தனா்.

படவிளக்கங்கள்

என்கே-28-மினி...

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்த மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்.

படம்-2

நாமக்கல்லில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்.

Image Caption

~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com