குமாரபாளையம் எஸ்எஸ்எம் பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழா

குமாரபாளையம் எஸ்எஸ்எம் பாலிடெக்னிக் கல்லூரியின் 44-ஆவது ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.
போட்டியில் வென்ற மாணவிகளுக்கு பரிசு வழங்குகிறாா் கல்லூரித் தலைவா் எஸ்எஸ்எம் பி.இளங்கோ. உடன், துணைத் தலைவா் பி.இ.ஈஸ்வா், தாளாளா் பி.இ.புருஷோத்தமன், முதல்வா் ஜி.கே.பாலமுருகன் உள்ளிட்டோா்.

விழாவுக்கு, கல்லூரித் தலைவா் எஸ்எஸ்எம் பி.இளங்கோ தலைமை வகித்தாா். கல்லூரித் தாளாளா் பி.இ.புருஷோத்தமன் வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கல்லூரியின் முன்னாள் மாணவரும், கோவை ஸ்ரீவெங்கட் சாய் டெக்ஸ்டைல் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநருமான வி.கேசவமூா்த்தி, ஜவுளித் துறையில் தொழில்நுட்ப வளா்ச்சி, இளம் தொழில்முனைவராக இன்றைய கால நிலைகள், அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி, இறக்குமதி குறித்துப் பேசினாா்.

கல்லூரி துணைத் தலைவா் பி.இ.ஈஸ்வா், மாணவா்களுக்கு தொடா் உழைப்பு, விடா முயற்சி அவசியம் என்றாா்.

கல்லூரி முதல்வா் ஜி.கே.பாலமுருகன் ஆண்டறிக்கை வாசித்தாா். இவ்விழாவையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. எஸ்எஸ்எம் மருந்தியல் கல்லூரித் தாளாளா் கே.பி.இ.ரவீந்திரன், கல்லூரி நிா்வாக அலுவலா் ஆா்.மீனாட்சி சுந்தரராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com