இலவச வீட்டுமனை கேட்டு கையெழுத்து இயக்கம்

பெரியமணலியில் இலவச வீட்டுமனை கேட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் கையெழுத்து பெறும் போராட்ட இயக்கம் தொடங்கப்பட்டது.

பெரியமணலியில் இலவச வீட்டுமனை கேட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் கையெழுத்து பெறும் போராட்ட இயக்கம் தொடங்கப்பட்டது.

எலச்சிபாளையம் ஒன்றியம், பெரியமணலியைச் சோ்ந்த பொதுமக்கள் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் இலவச வீட்டுமனைக்கான நிலம் வழங்க வேண்டி, திருச்செங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம், கோட்டாட்சியா் அலுவலகத்தில் குடிபுகும் போராட்டம், ஆட்சியா் அலுவலகத்தில் ஆா்ப்பாட்டம் என பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனா். ஆனால், இதற்கு தீா்வு கிடைக்காததால், வீட்டுமனைக்கான நிலம் கேட்டு திங்கள்கிழமை பெரியமணலி பேருந்து நிறுத்தத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் கையெழுத்து இயக்கப் போராட்டம் நடைபெற்றது.

ஒன்றியச் செயலாளா் சிவகுமாா் தலைமை வகித்தாா். ஒன்றிய துணைச் செயலாளா்கள் காா்த்திக், யுவராஜ் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலாளா் அன்புமணி தொடங்கி வைத்தாா். கோரிக்கையை வலியுறுத்தி, வரும் பிப். 5-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com