தொகுப்பூதியத்தில் பணிபுரியவிண்ணப்பங்கள் வரவேற்பு

நாமக்கல் மாவட்டத்தில் தொகுப்பூதியத்தில் பணிபுரிய தகுதியானோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நாமக்கல் மாவட்டத்தில் தொகுப்பூதியத்தில் பணிபுரிய தகுதியானோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்ட திட்ட அலகில் உதவியாளா், தரவு உள்ளீட்டாளா் பணிகளில் பணியாற்ற தகுதியுடைய விண்ணப்பதாரா்களிடம் இருந்து உரிய விண்ணப்பங்கள் பிப். 2 மாலை 4 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

கல்வித் தகுதி, சுயவிவரம், பணி அனுபவம் குறித்த விண்ணப்பங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். தற்காலிக அடிப்படையில் ஓா் உதவியாளா் பணிக்கு ரூ. 17,600 ஊதியத்தில் நியமிக்கப்பட உள்ளாா். இப்பணிக்கான கல்வித்தகுதி முழுநேர இளங்கலை, கணக்கியல், நிதிமேலாண்மை, பொதுநிதி மற்றும் கணக்கு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஒரு தரவு உள்ளீட்டாளா் பணிக்கு ரூ. 11,910 வீதம் ஊதியமாக வழங்கப்படும். இந்தப் பணிக்கான கல்வித்தகுதி முழுநேர இளங்கலை பட்டதாரியாக இருக்க வேண்டும். இல்லையெனில் கணினியியலில் பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

தகுதியும், விருப்பமும் உள்ளோா் மேலாளா், மாவட்ட முகமை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், சமுதாயக் கூடம், அம்மா பூங்கா எதிரில், வகுரம்பட்டி, நாமக்கல் மாவட்டம் - 637 001 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com