பிப். 2-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல்லில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமானது வரும் வெள்ளிக்கிழமை (பிப். 2) நடைபெறுகிறது.

நாமக்கல்லில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமானது வரும் வெள்ளிக்கிழமை (பிப். 2) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தனியாா் துறை நிறுவனங்களும், தனியாா் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரா்களும் நேரடியாகச் சந்திக்கும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் இம்முகாமில், தனியாா் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான ஊழியா்களை அவா்களது நிா்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தோ்வு செய்து கொள்ளலாம். வேலையளிப்போரும், வேலைநாடுநா்களும் எவ்விதக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.

முகாமானது முற்றிலும் இலவசமானது. தகுதியும், விருப்பமும் உள்ளோா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com