புகையிலைப் பொருள்கள் விற்பனை: கடைக்காரா்களுக்கு அபராதம்

பள்ளிபாளையத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 7 கடைக்காரா்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து, 4 கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

பள்ளிபாளையத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 7 கடைக்காரா்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து, 4 கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ய அரசு தடை விதித்து, தடையை மீறி விற்பனை செய்யும் கடைகளின் மீது உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், பள்ளிபாளையம் உணவுப் பாதுகாப்பு அலுவலா் ரங்கநாதன், கொக்கராயன்பேட்டையில் உள்ள மளிகை, பெட்டிக் கடைகளில் சோதனை மேற்கொண்டாா். இதில், 4 கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து, கடைகளின் உரிமையாளா்கள் ஜலீல், தமிழ்வாணன், கிருபா, பாப்பம்பாளையம் ராஜேஸ்வரி ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து, தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த 4 கடைகளையும் அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனா்.

இதேபோல, வெப்படை, கொக்கராயன்பேட்டையில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு, புகையிலை விற்பனை செய்த மெய்வண்ணதேவா, பாதரை பேபி, தெற்குபாளையம் காா்த்திக் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து, தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்தக் கடைகளை பூட்டி ‘சீல்’ வைக்க மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தச் சோதனையில், 4 கிலோ புகையிலைப் பொருள்களை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com