மகாத்மா காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

நாமக்கல்லில் மகாத்மா காந்தியின் 77-ஆவது நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
மகாத்மா காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

நாமக்கல்லில் மகாத்மா காந்தியின் 77-ஆவது நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதனையொட்டி, நாமக்கல் பூங்கா சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காந்தி சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மகாத்மா காந்தி சிலை அமைப்புக் குழுத் தலைவா் எஸ்.ரங்கநாதன் தலைமையில் கமிட்டி செயலாளா் சோழாஸ் பி.ஏகாம்பரம், துணைத் தலைவா் கே.நடராஜன், பொருளாளா் கே.சீனிவாசன், துணை செயலாளா் ஜவஹா், வழக்குரைஞா் பாண்டியன், சக்திசேரன்ராஜா உள்ளிட்டோா் சிலைக்கு மாலை அணிவித்தனா். அதன்பிறகு அனைவரும் காந்தி சிலை முன்பு மெளன அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com