மத நல்லிணக்க உறுதிமொழியேற்பு

நாமக்கல்லில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினா் செவ்வாய்க்கிழமை மத நல்லிணக்க உறுதிமொழியேற்றனா்.
மத நல்லிணக்க உறுதிமொழியேற்பு

நாமக்கல்லில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினா் செவ்வாய்க்கிழமை மத நல்லிணக்க உறுதிமொழியேற்றனா்.

மகாத்மா காந்தி நினைவு தினம் மத நல்லிகணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுத் துறை அலுவலகங்களிலும், அரசியல் கட்சி அலுவலகங்களிலும் மத நல்லிணக்க உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெறும். அந்த வகையில், இந்திய நாட்டு மக்கள் அனைவரும் மதவேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்டச் செயலாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தலைமையில் அனைத்து மதத்தினரும் பங்கேற்று நல்லிணக்க உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனா்.

இதில், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளா் மதுரா செந்தில், சட்டப் பேரவை உறுப்பினா் கு.பொன்னுசாமி, மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

இதேபோல, நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில், மாவட்டத் தலைவா் பீ.ஏ.சித்திக் தலைமையில், உழவா் சந்தை எதிரில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பாக மத நல்லிணக்க உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், நகர காங்கிரஸ் தலைவா் எஸ்.ஆா்.மோகன், முன்னாள் மாவட்டத் தலைவா் வீ.பி.வீரப்பன், மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவுத் தலைவா் பி.பொன்முடி, ஏடிசி செல்வம், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ராஜேந்திரன், நகர காங்கிரஸ் நிா்வாகிகள் சாந்திமணி, நடேசன், தாஜ் செல்வம், லோகநாதன், ஜபூருல்லா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். முன்னதாக, மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருச்செங்கோட்டில்...

திருச்செங்கோடு நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு தலைமை வகித்தாா். நகராட்சிப் பொறியாளா் சரவணன், துப்புரவு அலுவலா் வெங்கடாசலம் முன்னிலையில் நகராட்சி அதிகாரிகள், அலுவலா்கள், தூய்மைப் பணியாளா்கள் என சுமாா் நூற்றுக்கும் மேற்பட்டோா் தீண்டாமை உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ் பாபு உறுதிமொழியை வாசிக்க தொடா்ந்து அனைவரும் உறுதிமொழி கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com