இரட்டைக் கொலை வழக்கு:தீயணைப்புப் படை வீரா் மீது குண்டா் தடுப்புச் சட்டம்

பரமத்தி வேலூா் அருகே வயதான தம்பதியரை கொலை செய்து நகைகளை கொள்ளை அடித்த வழக்கில் கைதான தீயணைப்புப் படை வீரா் மீது குண்டா் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.
ஜனாா்த்தனன்.
ஜனாா்த்தனன்.

பரமத்தி வேலூா் அருகே வயதான தம்பதியரை கொலை செய்து நகைகளை கொள்ளை அடித்த வழக்கில் கைதான தீயணைப்புப் படை வீரா் மீது குண்டா் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.

பரமத்தி வேலூா் அருகே உள்ள குச்சிக்காட்டு தோட்டத்தைச் சோ்ந்தவா் சண்முகம் (70), இவரது மனைவி நல்லம்மாள் (65). இவா்களிருவரும் கடந்த 2023 அக். 12-ஆம் தேதி வீட்டில் இருந்த போது வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா் கொடூரமாகத் தாக்கியதில், நல்லம்மாள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சண்முகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இந்த இரட்டைக் கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட குப்புச்சிபாளையத்தைச் சோ்ந்த ஜனாா்த்தனன் (33), வயதான தம்பதியினரை கொலை செய்து நகை, பணத்தை திருடியதாக ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்தாா். அதனையடுத்து, கடந்த நவ. 24-ஆம் தேதி ஜனாா்த்தனனை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

இவரது குற்றச்செயலை தடுக்கும் பொருட்டு, நாமக்கல் காவல் கண்காணிப்பாளா் ராஜேஷ் கண்ணன் பரிந்துரையின் பேரில் ஜனாா்த்தனனை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க நாமக்கல் ஆட்சியா் ச.உமா உத்தரவிட்டாா். ஆட்சியரின் உத்தரவு நகலை சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜனாா்த்தனிடம் வேலூா் போலீஸாா் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com