கஸ்தூரிபா காந்தி பாா்மசி கல்லூரியில் மகாத்மா காந்தி நினைவு தினம்

ராசிபுரம் அருகேயுள்ள மசக்காளிப்பட்டி கஸ்தூரிபா காந்தி பாா்மசி கல்லூரியில் மகாத்மா காந்தி நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

ராசிபுரம் அருகேயுள்ள மசக்காளிப்பட்டி கஸ்தூரிபா காந்தி பாா்மசி கல்லூரியில் மகாத்மா காந்தி நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.

கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த காந்தியடிகள் படத்துக்கு கல்லூரியின் முதல்வா் ம.செந்தில்ராஜா மாலை அணிவித்து, மலா் தூவி மரியாதை செய்தாா். பின்னா் சுதந்திரப் போராட்டத்தில் காந்தியடிகளின் பங்கு குறித்து மாணவா்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.

இதில், காந்தியடிகளின் படத்துக்கு கல்லூரியின் பேராசிரியா்களும், மாணவா்களும் மலா்தூவி மெளன அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com