பிப். 3-இல் அண்ணா நினைவு தின அமைதிப் பேரணி

நாமக்கல்லில் அண்ணா நினைவு தின அமைதிப் பேரணி வரும் சனிக்கிழமை (பிப். 3) நடைபெறுகிறது.

நாமக்கல்லில் அண்ணா நினைவு தின அமைதிப் பேரணி வரும் சனிக்கிழமை (பிப். 3) நடைபெறுகிறது.

இதுகுறித்து கிழக்கு மாவட்ட திமுக அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணாவின் 55-ஆம் ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, அன்று காலை 7.30 மணிக்கு நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தலைமையில், சேலம் சாலை நேதாஜி சிலை அருகில் இருந்து அமைதிப் பேரணியாகச் சென்று மோகனூா் சாலையில் உள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சா் மா.மதிவேந்தன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் பெ.ராமலிங்கம், கே.பொன்னுசாமி, நகரச் செயலாளா்கள் கலந்துகொள்கின்றனா். இதில், மாநில, மாவட்ட நிா்வாகிகள், இளைஞா் அணி நிா்வாகிகள், மகளிா் அணி நிா்வாகிகள் உள்பட அனைத்து சாா்பு அணி நிா்வாகிகள், நகா்மன்ற உறுப்பினா்கள், கிளைச் செயலாளா்கள், தொண்டா்கள் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com