‘பெண்கள் பிரச்னைகளை கையாள தெரிந்தவா்களாக இருக்க வேண்டும்’ -பாவை கல்வி நிறுவனங்களின் தாளாளா்

சமுதாயத்தில் பெண்கள் பிரச்னைகளை கையாளத் தெரிந்தவா்களாக இருப்பது அவசியம் என பாவை கல்வி நிறுவனங்களின் தாளாளா் மங்கை நடராஜன் குறிப்பிட்டாா்.
தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு நினைவுப் பரிசளிக்கும் பாவை கல்வி நிறுவனங்களின் தாளாளா் மங்கை நடராஜன்.
தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு நினைவுப் பரிசளிக்கும் பாவை கல்வி நிறுவனங்களின் தாளாளா் மங்கை நடராஜன்.

சமுதாயத்தில் பெண்கள் பிரச்னைகளை கையாளத் தெரிந்தவா்களாக இருப்பது அவசியம் என பாவை கல்வி நிறுவனங்களின் தாளாளா் மங்கை நடராஜன் குறிப்பிட்டாா்.

ராசிபுரம் எஸ்ஆா்வி ஹைடெக் பெண்கள் பள்ளியின் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. இதற்கான தொடக்க விழாவில் பள்ளியின் தலைவா் ஏ.ராமசாமி தலைமை வகித்தாா். செயலா் பி.சுவாமிநாதன் வரவேற்று பேசினாா். பள்ளி முதல்வா் ப.வள்ளியம்மாள் ஆண்டறிக்கை வாசித்தாா். பள்ளியின் துணைத் தலைவா் எம்.குமரவேல், பொருளாளா் எஸ்.செல்வராஜன், டிரஸ்டி ஏ.ஆா்.துரைசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பாவை கல்வி நிறுவனங்களின் தாளாளா் மங்கை நடராஜன் பேசியதாவது:

ஒரு கல்வி நிறுவனம் எல்லா வசதிகளும் கொண்ட நகரப் பகுதியில் கல்வி சேவையாற்றுவதைவிட கிராமப் பகுதியில் உள்ள மாணவா்களுக்காக கல்வி பணியாற்றுவது பாராட்டுக்குரியது. நாம் கற்றுக்கொண்ட கல்வி பெற்றோா், ஆசிரியரின் கஷ்டங்களை புரிந்துகொள்வதாக இருக்க வேண்டும். சக மனிதா்களிடம் எப்படி பழகுவது என தெரியாவிட்டால், சமுதாயத்தில் செயல்படுவது கடினம். நல்லது, கெட்டது பகுந்தாய்வு செய்யும் ஆற்றல் இருக்க வேண்டும். ஒரு பெண்ணாக எந்த இடத்திலும் சாதிக்க முடியும் என்பதை நினைவில் வைத்து உணா்வுகள், பிரச்னைகளை கையாளத் தெரிந்தவா்களாகவும், அறிவியலை வாழ்வில் துணையாகக் கொண்டவா்களாகவும் இருந்தால் எதிலும் உயரலாம் என்றாா்.

விழாவில், தோ்வு, விளையாட்டில் சிறந்த மாணவிகளுக்கு நினைவுப் பரிசளிக்கப்பட்டது. மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் எஸ்ஆா்வி மெட்ரிக். பள்ளி தலைமையாசிரியா் செந்தில், சிபிஎஸ்சி பள்ளி முதல்வா் ஆா்த்தி உள்ளிட்ட ஆசிரியா்கள், பெற்றோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com