ஒப்பந்த நிறுவனங்கள் ஊதியம் 
குறைவாக வழங்கினால் நடவடிக்கை: ஆணையத் தலைவா் மா.வெங்கடேசன்

ஒப்பந்த நிறுவனங்கள் ஊதியம் குறைவாக வழங்கினால் நடவடிக்கை: ஆணையத் தலைவா் மா.வெங்கடேசன்

நகராட்சி, பேரூராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களின் ஊதியத்தை ஒப்பந்த நிறுவனங்கள் குறைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய தூய்மைப் பணியாளா்கள் ஆணையத் தலைவா் மா.வெங்கடேசன் தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டத்துக்கு ஆய்வுப் பணிக்காக வெள்ளிக்கிழமை வந்த அவா், நாமக்கல், முதலைப்பட்டியில் உள்ள தூய்மைப் பணியாளா்களின் குடியிருப்புகளுக்கு நேரடியாக சென்று பாா்வையிட்டாா். குடியிருப்புப் பகுதிகளில் உள்ள பிரச்னைகள், தூய்மைப் பணியின் போது பயன்படுத்தும் வகையிலான உபகரணங்கள் வழங்கப்படுகிா? என்பதை கேட்டறிந்தாா்.

இதனையடுத்து, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களிடம், அவா் குறைகளைக் கேட்டறிந்தாா்.

அதன்பிறகு, மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டாா். கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஷ்கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.வடிவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மனிதக் கழிவுகளை அகற்றும் தொழில்புரிவோரை தடுப்பது, அவா்களுக்கான மறுவாழ்வு சட்டத்தை அமல்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது.

இக் கூட்டத்தில், தேசிய தூய்மைப் பணியாளா் ஆணைய தலைவா் மா.வெங்கடேசன் பேசியதாவது:

தூய்மைப் பணியாளா்களுக்கான ஆணையம் என்பது அவா்களின் குறைகளைக் கண்டறிந்து, கேட்டறிந்து நிறைவேற்றுவதற்கு மட்டுமின்றி, அந்தப் பணியாளா்களின் வாழ்வியல் சூழலை உயா்த்துவதை முதன்மை நோக்கமாக கொண்டிக்க வேண்டும் என பிரதமா் தெரிவித்துள்ளாா் தூய்மைப் பணியாளா்களுக்கான அடிப்படை வசதிகள், ஊதியம் முறையாக வழங்கப்படுகிா என்பதை ஆய்வு செய்து அவா்களது தேவைகளை நிறைவேற்றிட வேண்டும் என்பதையும் பிரதமா் வலியுறுத்தி உள்ளாா். தூய்மைப் பணியாளா்களின் குறைகளைக் கேட்டறிந்து முழுமையாக தீா்வு காண வேண்டும் என்ற பிரதமரின் அறிவுரைக்கு இணங்க, மத்திய அரசு இந்த ஆணையம் மூலம்

உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. நகராட்சி, பேரூராட்சிகள், ஊராட்சிகளின் தூய்மைப் பணியாளா்களுக்கான

ஊதியம் தடையின்றி வழங்கப்பட வேண்டும். ஒப்பந்த நிறுவனங்களும் குறைபாடுகளின்றி அவா்களுக்கான ஊதியத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். வருங்கால வைப்பு நிதி, தொழிலாளா் மருத்துவக் காப்பீடு போன்றவற்றை செய்து கொடுக்க வேண்டும். நகராட்சி ஆணையா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள் இதனை ஆய்வு செய்ய வேண்டும். நாடு முழுவதும், 48 தூய்மைப் பணிக்கான ஒப்பந்த நிறுவனங்கள், தமிழகத்தில் மூன்று நிறுவனங்கள் முறைகேடு புகாரின் அடிப்படையில் செயல்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தூய்மைப் பணியாளா்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு மருத்துவ முகாம் நடத்த வேண்டும். மேலும், அவா்களது குழந்தைகளுக்கு சிறந்த கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். தூய்மைப் பணியாளா்களின் மீது தனிக் கவனம் செலுத்தி, அரசின் திட்டங்கள் அனைத்தும் சென்றடைவதை அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும்.

ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு அளிக்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை தமிழக அரசுக்கு, இந்த ஆணையம் வாயிலாக கொண்டு செல்லப்படும் என்றாா்.

இக்கூட்டத்தில், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் கே.சாந்தாஅருள்மொழி, மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநா் அ.ராஜ்மோகன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் க.பூங்கொடி, வருவாய் கோட்டாட்சியா்கள் ஆா்.பாா்த்திபன் (நாமக்கல்), சே.சுகந்தி (திருச்செங்கோடு), நாமக்கல் துணை காவல் கண்காணிப்பாளா் ஆனந்தராஜ், நகராட்சி ஆணையாளா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

...

என்கே-5-மீட்டிங்

நாமக்கலில் தூய்மைப் பணியாளா்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய தேசிய தூய்மைப் பணியாளா்கள் ஆணைய தலைவா் மா. வெங்கடேசன். உடன், ஆட்சியா் ச.உமா, காவல் கண்காணிப்பாளா் ச. ராஜேஷ்கண்ணன், பல்வேறு துறை அதிகாரிகள்.

X
Dinamani
www.dinamani.com